தலசயனபெருமாள் கோவில் மாசி தெப்ப உற்சவம்!
ADDED :4377 days ago
மாமல்லபுரம்: தலசயன பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் மாசி மகத்தன்று தெப்ப உற்சவம் மற்றும் தீர்த்தவாரி விழா நடைபெறும். இந்த ஆண்டுக்கான மாசிமக தெப்ப உற்சவம் வரும் 13ம் தேதி புஷ்கரணி தெப்பக்குளத்தில் நடக்கிறது. மறுநாள் காலை கடற்கரையில் தீர்த்தவாரி திருவிழா நடக்கிறது. அப்போது தலசயன பெருமாளுடன், ஆதிவராகபெருமாளும் சக்கரத்தாழ்வாரும் கடற்கரையில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.