வீரட்டானேஸ்வரர் கோவிலில் மாசி மகப் பெருவிழா
ADDED :4266 days ago
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் மாசிமகப் பெருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது.திருக்கோவிலூர், கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் 10 நாட்கள் நடக்கும் மாசிமகப் பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. காலை 7.45 மணிக்கு அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை. கலச ஸ்தாபனம், பஞ்சமூர்த்திகளுக்கு அபிஷேகம், ரிஷபக்கொடி பூஜை, கொடியேற்றி மகா தீபாராதனை நடந்தது.சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சோமாஸ்கந்தருக்கு சோடசோபப்சார தீபாராதனை, நவசந்திகள் ஆவாகனம் செய்து பலிபூஜை நடந்தது. சுவாமி கோவில் வலம் வந்தார். பஞ்சமூர்த்திகள் அதிகார நந்தி வாகனத்தில் வீதியுலா நடந்தது.