உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருச்செந்தூர் முருகன் கோயிலில் மாசித்திருவிழா கொடியேற்றம்

திருச்செந்தூர் முருகன் கோயிலில் மாசித்திருவிழா கொடியேற்றம்

தூத்துக்குடி : திருச்செந்தார் முருகன் கோயிலில் மாசித்திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். திருச்செந்தூர் முருகன் கோயிலில் மாசித்திருவிழா துவக்க நாளான நேற்று அதிகாலை ஒரு மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாரதணை நடந்தது. 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம்,3 மணிக்கு வெள்ளி பல்லக்கில் கொடிப்பட்ட வீதியுலா நடந்தது. இரண்டாம் பிரகாரத்தில் உள்ள செம்பு கொடி மரத்தில் 5.40 மணிக்கு கொடியேற்றப்பட்டது. கொடி மரம் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, மீனாட்சி பட்டரால்,சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடந்தது.6.50 மணிக்கு மகா தீபாரதணை நடந்தது. இதில் கோயில் தக்கார் கோட்டை மணிகண்டன்,இணை கமிஷனர் பொறுப்பு ஞானசேகரன், தம்பிரான் சுவாமிகள் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். மாசித்திருவிழாவில் தினசரி காலை, மாலை இரு வேளைகளில் சுவாமி வீதியுலா நடக்கவுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !