உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருத்தணி மாசிப் பெருவிழாவில் சுப்பிரமணியர் வீதிஉலா!

திருத்தணி மாசிப் பெருவிழாவில் சுப்பிரமணியர் வீதிஉலா!

திருத்தணி: திருத்தணியில் நடைபெற்று வரும் மாசிப்பெரு விழாவில் நேற்று புலி வாகனத்தில் சுப்பிரமணியசுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாசிப் பெருவிழா கடந்த 5-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற விழாவில் மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம், மற்றும் தீபாராதனை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து மாலை 4.30 மணிக்கு புலி வாகனத்திலும், இரவு யானை வாகனத்தலும் மலைக்கோயிலில் திருவீதி உலா வந்த வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !