சிதம்பரம் நடராஜப்பெருமானுக்கு மகாபிஷேகம்!
ADDED :4353 days ago
சிதம்பரம்: நடராஜர் கோவிலில் வீற்றுள்ள சிவகாமசுந்தரி சமேத நடராஜப்பெருமானுக்கு மாசி மாத மகாபிஷேகம் நேற்று நடைபெற்றது. நடராஜர் கோவிலில் மாசி மாத மகாபிஷேகம் சித்ரசபை முன்பு உள்ள கனகசபையில் நேற்று மாலை 6.30 மணிக்கு தொடங்கியது. மகாபிஷேகத்தை முன்னிட்டு, நடராஜப்பெருமான் மற்றும்சிவகாமசுந்தரி அம்பாள் சித்சபையிலிருந்து கனகசபைக்கு எழுந்தருளினர். பின்னர் சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்திக்கு பால், சந்தனம், தேன், தயிர், இளநீர், பன்னீர்பஞ்சாமிர்தம், புஷ்பம், விபூதி உள்ளிட்டவை அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை செய்யப்பட்டது.