மகிமை மிக்க எண் 8!
ADDED :4646 days ago
நலமும் வளமும் மங்காத புகழும் தரும் எண் 8 என்பதில் எள்ளளவும் ஐயம் இல்லை. சிவபெருமானின் குணங்கள் 8. கிருஷ்ண பரமாத்மா 8வது மகனாக அவதரித்தார். ஜாதகத்தில் 8வது இடம் ஆயுள் தானமாகும். முனிவர்கள் அடையும் சித்தி 8. திசைகள் 8. மனிதர்களின் உயரம் அவரவர் கையால் 8 சாண் ஆகும். சூரியனின் ஒளி பூமியை வந்தடைய 8 நிமிடம் பிடிக்கிறது. ஐஸ்வரியம் 8. ஆண்டவன் சிலைகளுக்கு சார்த்துவது அஷ்டபந்தனம் என்னும் 8 வகை மூலிகைகளால் ஆன மருந்தாகும். சனியின் ஆதிக்க எண் 8. கிருஷ்ணர் 8வது அவதாரம். அஷ்டமி திதியில் பிறந்தார். அஷ்டதிக்குபாலகர்கள் 8.