உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வராத உறவுகள்!

வராத உறவுகள்!

ராமர் பட்டாபிஷேகத்திற்கு முதலில் நிச்சயம்செய்தபோது முக்கியமான இருவரை தசரதன் அழைக்கவில்லை. ஒருவர், சீதையின் தந்தை ஜனகர்; இன்னொருவர், கைகேயின் தந்தை அசுவபதி. கைகேயியைத் திருமணம் செய்தபோது அவளுக்குப் பிறக்கும் குழந்தையைப் பட்டத்துக்கு உரிமையாக்குவதாக அசுவபதியிடம் தசரதர் வாக்குக் கொடுத்திருந்தார். ராமனுக்கு முடிசூட்டுவதை அறிந்தால் அசுவபதி கலக்கம் அடையக்கூடும் என்று தசரதர் நினைத்தார். ராமனுக்கு முடிசூட்டாவிட்டாலோ மூத்த மகனுக்கு முடி சூட்ட மறுத்து தசரதர் தவறு இழைத்துவிட்டதாக ஜனகர் குற்றம் சாட்டுவார். மூத்த மகனுக்கு முடிசூட்ட வேண்டும் என்பது இட்சுவாகு வம்ச பரம்பரைப் பழக்கமாகும். இந்த தர்மசங்கடங்களைத் தவிர்க்கவே, அந்த இருவரையுமே தசரதன் ராமனின் முடிசூட்டு விழாவுக்கு அழைக்கவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !