குமரிகிரி கோவில் திருப்படி திருவிழா
ADDED :4284 days ago
சேலம்: சேலம், குமரகிரி அடிவாரத்தில் உள்ள குமரகிரி தண்டாயுதபாணி ஸ்வாமி கோவிலில், நேற்று திருப்படித் திருவிழா நடந்தது.படி விழாக்குழு தலைவர் மாணிக்கம் வரவேற்றார். சுப்ரமணிய ஸ்வாமி விழாக்குழு தலைவர் ராமமூர்த்தி தலைமை வகித்தார்.அடிவாரத்தில் அமைந்துள்ள படிக்கட்டுகளை அலங்கரித்து, வாழைப்பழம், தேங்காய், பூக்கள், மஞ்சள், குங்குமம் பொட்டு வைத்து பக்தர்கள் வழிபட்டனர். தொடர்ந்து, குமரகிரியின், 60ம் படியிலும் படி பூஜை நடந்தது.கன்னிகா பரமேஸ்வரி கோவில் தலைவர் தம்பு, ராஜாமணி, மணி, குமரகிரி கோவல் தக்கார் ஞானமணி, முன்னாள் அறங்காவலர் செந்தில்நாதன் உள்பட பக்தர்கள் படி விழாவில் பங்கேற்றனர்.