உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுப்பிரமணியர் கோவிலில் 108 சங்காபிஷேகம்

சுப்பிரமணியர் கோவிலில் 108 சங்காபிஷேகம்

ஆர்.கே.பேட்டை: சுப்பிரமணிய சுவாமி கோவிலில், 108 சங்காபிஷேகம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஆர்.கே.பேட்டை அடுத்த அம்மையார்குப்பம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று காலை, 108 சங்காபிஷேகம் நடந்தது. காலை 8:00 மணிக்கு கோவில் மண்டபத்தில், வேத மந்திரங்கள் ஓத, புனித நீர் அடங்கிய சங்குகளுக்கு தாமரை மலர் துாவி, பூஜை நடந்தது. இதைத் தொடர்ந்து உற்சவர் சுப்பிரமணியருக்கு, அபிஷேகங்கள் நடந்தன. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !