மாசாணியம்மன் கோவில் உண்டியல் திறப்பு
ADDED :4282 days ago
ஆனைமலை : ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் நேற்று உண்டியல் திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. ஆனைமலையில் உள்ள மாசாணியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கோவிலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கைகளை மாதம்தோறும் எண்ணப்படும். இந்த மாதத்திற்கான காணிக்கை உண்டியல் நேற்று திறந்து எண்ணப்பட்டது. கோவிலில் உள்ள 16 நிரந்திர உண்டியல்களும் எண்ணப்பட்டது. அதில் 32 லட்சத்து,19 ஆயிரத்து 833 ரூபாய் இருந்தது. மேலும் 272 கிராம் தங்கம், 384 கிராம் வெள்ளியும் இருந்தது. அத்துடன் வெளிநாட்டு கரன்ஸிகளும் உண்டியலில் இடப்பெற்று இருந்தது. உண்டியல் திறப்பு நிகழ்ச்சி கோவில் இணை ஆணையர் அனிதா முன்னிலையில் நடந்தது. உண்டியல் எண்ணும் பணியில் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் திருக்கோவில் பணியாளர்களும் ஈடுப்பட்டனர்.