ஜீவமுக்தீஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி விழா!
பொள்ளாச்சி: பொள்ளாச்சி ஜீவநாயகி அம்மன் உடனமர்ந்த ஜீவமுக்தீஸ்வரர் கோவிலில், மகா சிவராத்திரி விழாவையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன. பொள்ளாச்சி முத்துக்குமாரசாமி லே-அவுட் ஜீவநாயகி அம்மன் உடனமர்ந்த ஜீவமுக்தீஸ்வரர் கோவிலில், மகா சிவராத்திரி திருவிழா நேற்று நடந்தது. காலை 10:00 மணி முதல் மதியம் 12:00மணி வரை திருவிளக்கு வழிபாடு, வேள்வி நிறைவு, பேரொளி வழிபாடு நிகழ்ச்சியும்; தொடர்ந்து, மாலை 4:00 மணி முதல் 6:00 மணி வரை பிரதோச வழிபாடு நடந்தன. இரவு 8:00 மணி முதல் 10:00 மணி வரை முதலாம் கால சிவனிரவு அபிேஷக வழிபாடு, சிவபூஜை செய்தல், பேரொளி வழிபாடும்; இரவு 10:00 மணி முதல் 12:00 மணி வரை இரண்டாம் கால அபிேஷக வழிபாடு, சிவ பூஜை நடந்தது. நள்ளிரவு 1:00 மணி முதல் 3:00 மணி வரை மூன்றாம்கால அபிேஷக வழிபாடு, சிவ பூஜை செய்தல், அதிகாலை 4:00 மணி முதல் மாலை 6:00மணி வரை நான்காம் காலஅபிேஷக பூஜை, சிவ பூஜை செய்தல், பேரொளி வழிபாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.