உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாகூர் கோவிலில் சிவராத்திரி விழா!

பாகூர் கோவிலில் சிவராத்திரி விழா!

பாகூர்: பாகூரில் 1400 ஆண்டுகள் பழமையான வேதாம்பிகை சமேத மூலநாதர் கோவிலில், சிவராத்திரி விழா இன்று (27 ம் தேதி) நடக்கிறது. அதையொட்டி, காலை 9:?? மணிக்கு மூலநாதர், வேதாம்பிகையம்மன், முருகர், பாலவிநாயகர் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. பிரதோஷத்தை முன்னிட்டு, மாலை 4:00 மணிக்கு, நந்தி பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து தீபாரதனை நடக்கிறது. அதைத்தொடர்ந்து, மாலை 6:00 மணிக்கு, முதல் கால மகா அபிஷேகத்துடன் மகா சிவராத்திரி விழா துவங்குகிறது.28ம் தேதி அதிகாலை 5:00 மணி வரை ஆறு காலங்களாக மூலநாதர் சுவாமிக்கு மகா அபிஷேகம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !