ராமேஸ்வரம் கோயிலில் மாசி தேரோட்டம்!
ADDED :4278 days ago
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயிலில், மாசி சிவராத்திரி 9ம் நாள் விழாவான நேற்று அலங்கரிக்கப்பட்ட தேர்களில் சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் எழுந்தருளினர். கோயில் இணை கமிஷனர் செல்வராஜ், நகராட்சி தலைவர் அர்ச்சுணன், கோயில் உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகணன், கோயில் சூப்பரண்டன்ட் கக்காரின், கோயில் பேஷ்கார்கள் ராதா, அண்ணாதுரை, பாஜக தேசிய பொது குழு உறுப்பினர் முரளீதரன், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். பின், தேர் நான்கு ரதவீதிகளில் வலம் வந்து நிலையை அடைந்தது.