ஆலங்குடி குருபகவான் கோவிலில் சங்காபிஷேகம்
ADDED :4267 days ago
நீடாமங்கலம், -: திருவாரூர் ,நீடாமங்கலம் அருகே ஆலங்குடி கிராமத்தில் ஆபத்சகாயேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் குரு தட்சிணாமூர்த்தி தனிச்சன்னதியுடன் அருள்பாலிக்கிறார். எனவே இக்கோவில் குருபகவானுக்குரிய பரிகார தலமாக உள்ளது. . இக்கோவிலில் மாசி மகா குருவாரத்தை முன்னிட்டு சங்காபிஷேகம் நடைபெற்றது. காலை 9 மணி அளவில் சிறப்பு யாகம் நடைபெற்றது. மதியம் 1 மணி அளவில் குருபகவானுக்கு சிறப்பு அபிசேகம் நடந்தது. பின்னர் பூர்ணாஹுதி பூஜை நடந்தது.
தொடர்ந்து 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது. பூஜைகளை ஜோதிராமலிங்க சிவாச்சாரியார் செய்து வைத்தார். சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.