உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நத்தம் மாரியம்மன் கோயில் தேரோட்டம்

நத்தம் மாரியம்மன் கோயில் தேரோட்டம்

நத்தம் மாரியம்மன் கோயில் மாசிப் பெருந்திருவிழா வை முன்னிட்டு அம்மன் மின் விளக்குகளால் அலங் கரிக்கப்பட்ட கேடய தேரில் நகர் வலம் வந்தார். நத்தம் மாரியம்மன் கோயில் மாசிப் பெருந்திருவிழா கடந்த 3 ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 4ம் தேதி பக்தர்கள் வேண்டுதலை செலுத்த கரந்தன்மலை கன்னிமார் கோயில் தீர்த்தக் குடம் எடுத்துக் காப்புக்கட் டினர்.அதனை தொடர்ந்து நடைபெறும் 15 நாள் விழாவில் முதல் வெள்ளியான நேற்று இரவு 9மணி க்கு அம்மன் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட கேடயம் வாக னத் தேரில் நகர் வலம் வந்தார்.இதில் ஏராளமான பக்த ர்கள் பங்கேற்று அம்மனை வழிப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !