கருப்புசுவாமி கோயில் திருவிழா
ADDED :4267 days ago
நத்தம்,: நத்தம் காந்தி நகரில் அமைந்துள்ள மலையாளத்துக் கருப்புச்சுவாமி மற்றும் மந்தையம்மன் கோயில் திரு விழா நடந்தது. ஆறு நாட்கள் நடந்த இவ் விழாவில் அழகர் மலை தீர்த்தம் எடுத்து வந்து பக்தர்கள் காப்புக்கட்டி விரதம் துவங்கினர். நல்லாக்குளத்திலிருந்து சுவாமி புறப்பாடு நடந்தது.பெண்கள் பொங்கல்வைத்து முளைப்பாரி எடுத்தனர். அக்னிச்சட்டி எடுத்தல்,கிடா வெட் டுதல் நடந்தது. மஞ்சள் நீராடுதலுடன் விழா நிறைவுப் பெற் றது.