ஆறுமுகன் உலா!
ADDED :4629 days ago
கன்னியாகுமரி மாவட்டம் குமாரக் கோயில், மருங்கூர் தலங்களில் திருவிழா நாட்களில் முருகன் குதிரை வாகனத்தில் உலா வருவது அரிதான காட்சி. கடலூர் மாவட்டம் பரங்கிப் பேட்டையிலும், திருச்சி மாவட்டம் குமார வயலூர் தலத்திலும் முருகன் ஆடு வாகனத்தில் பவனி வருவதுண்டு. திருப்பரங்குன்றத்தில் ஆடு, யானை, மயில் என மூன்று வாகனங்களிலும் உலாவருவான் உமாசுதன்.