உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மகா சிவராத்திரியில் விஸ்வரூப தரிசனம்!

மகா சிவராத்திரியில் விஸ்வரூப தரிசனம்!

திருவாரூரில் இருந்து 15 கி.மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது, வேளுக்குடி. இங்குள்ள இறைவன் கங்காள ருத்ரன்; இறைவி அங்காளபரமேஸ்வரி, மகாசிவராத்திரி திருவிழா இங்கு மிக சிறப்பாக நடைபெறுகிறது. ஐம்பெரும் பூதங்களும் இறைவியிடம் அடிமையான பின்பு பக்தன் ஒருவன் தீவட்டியுடன் வந்து வழிகாட்டியதன் நினைவாக மகாசிவராத்திரியன்று அவன் சமுதாயத்து மக்கள் ஒன்று கூடி சீர்வரிசைப் பொருட்களை மேளம், தாளம் முழங்க எடுத்துக் கொண்டு வருவார்கள். பின்னர் இரவு 12 மணிக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.  பின்னர் ருத்ரன் வேடம் அணிந்த ஒருவர் உடல் முழுவதும் திருநீறு பூசி, காலில் சிலம்பு அணிந்து அம்மனிடம் சென்று திரிசூலம் எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெறும். இது விஸ்வரூப தரிசனம் என்று அழைக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !