உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செஞ்சி கோவில் தூண்களுக்கு பூஜை

செஞ்சி கோவில் தூண்களுக்கு பூஜை

செஞ்சி: செஞ்சி அருணாச்சலேஸ்வரர் கோவிலில் தியான மண்டபத்திற்கு வாயிற்படி தூண் அமைக்கும் பணி நடந்தது. செஞ்சி பீரங்கிமேடு அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ஒன்னரை கோடி ரூபாய் மதிப்பில் திருப் பணிகள் நடக்கின்றன.வரும் ஜூன் 1ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடத்த உள்ளனர். திருப்பணியின் ஒரு பகுதியாக 30 லட்சம் ரூபாய் மதிப்பில் 20 அகலம், 90 அடி நீளத்தில் தியான மண்டபமும், 10 அடி அகலம் 60 அடி நீளத்தில் சொற்பொழிவு கூடமும் கட்டி வருகின்றனர். முற்றிலும் கருங்கற்களால் கட்டி வரும் இந்த மண்டபத்தின் வாயிற்படி தூண்கள் அமைக்கும் பணி நேற்று காலை 7 மணிக்கு நடந்தது. தூண்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்து கிரேன்களை கொண்டு நிலை நிறுத்தினர்.திருப்பணிக் குழு தலைவர் டாக்டர் ரவிச்சந்திரன், பேரூராட்சி துணை தலைவர் சங்கர், முன்னாள் துணை தலைவர் அரங்க ஏழுமலை, முன்னாள் ஊராட்சி தலைவர் ஏழுமலை, ஓய்வூதிய சங்க செயலாளர் லோக ஜெயராமன், திருப்பணிக்குழு செல்வம், ஜெயக்குமார், ரமேஷ், முருகன், சர்தார்சிங், கண்ணாயிரம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !