இஸ்கான் கோவிலில் அவதார திருநாள்
ADDED :4259 days ago
சேலம்: சேலம், கருப்பூர் அடுத்த கரும்பாலையில் உள்ள இஸ்கான் கோவிலில், கிருஷ்ண சைதன்ய மஹா பிரபு அவதார திருநாள் விழா, நாளை நடக்கிறது. மாலை, 5.30 மணிக்கு, கிருஷ்ண பஜனையுடன் விழா துவங்குகிறது. மாலை, 6.30 மணிக்கு சிறப்பு அபிஷேகம், 7 மணிக்கு சைதன்ய லீா, 7.45 மணிக்கு நாடகம், 8.30 மணிக்கு மங்கள ஆரத்தி எடுத்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது. மஹாபிரபு அவதரித்த நாளை, கவுர பூர்ணிமா விழாவாக, வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இக்கலியுகத்தில், பாவக்கடலில் மூழ்கியுள்ள கட்டுண்ட ஆத்மாக்களை, ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தின் மூலம் அவர்களை விடுவித்தார். இதுவே, அவருடைய அவதார நோக்கம். இக்கருணையை எல்லா மக்களும் பெறவே, விழா சிறப்பாக கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.