உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சாப்பிட உட்கார்ந்தாச்சு!

சாப்பிட உட்கார்ந்தாச்சு!

உணவு உண்ணும் போது பின்பற்ற வேண்டியவற்றை நபிகள் நாயகம் அவர்களின் பொன்மொழி வாயிலாகத் தெரிந்து கொள்வோம்.உணவு வைக்கப் பட்டால் உங்களின் செருப்புகளை கழற்றி விடுங்கள். அதுஉங்களின் பாதங்களுக்கு இன்பத்தை அளிக்கும்.உங்களில்யாராகிலும் தம் இடது கையால் உண்ணுவதும், தண்ணீர் பருகுவதும் கூடாது. ஏனென்றால் இப்லீஸ்(ஷைத்தான்) தனது இடதுகையாலேயே உண்ணுகிறான்.எல்லோரும் ஒன்று கூடி உண்ணுங்கள். பிரிந்துவிடாதீர்கள். ஒன்று கூடி இருப்பதில்தான் பரகத் இருக்கிறது.நீங்கள் இரவில் பட்டினியாக இருக்காதீர்கள். பட்டினி இருப்பதால் விரைவில்உங்களுக்கு முதுமை தட்டி விடும்.வீண்செலவும், ஆடம்பரமும் இல்லாத முறையில் உண்ணுங்கள், குடியுங்கள்.ஒட்டகம் குடிப்பது போன்று தண்ணீரை குடிக்காதீர்கள். 2 அல்லது 3 முறைகள் மூச்சுவிட்டு குடிப்பதுடன், குடிக்கும் போது பிஸ்மி கூறிகுடியுங்கள். குடித்த பின் அல்ஹம்துலில்லாஹ் என்று கூறுங்கள்.உலகில் வயிறு நிரம்பசாப்பிடுபவர்கள் கியாம நாளில் பசியுடையவர்களாக இருப்பார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !