உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முதல்வர் மந்திரம்!

முதல்வர் மந்திரம்!

ஓம் என்னும்பிரணவ மந்திரமே உலகின் முதல் மந்திர ஒலி.தெய்வங்களுக்குரியமந்திரத்தை ஓம் எனச் சேர்த்துச் சொன்னால் மட்டுமே அதற்குரிய பலன் நம்மைச் சேரும். இதனைவடமொழி மந்திரம் எனபலரும் கருதுகின்றனர். ஆனால், ஓம் என்பது, கடவுளாகிய பிரம்மத்தைக் குறிக்கும் குறியீட்டுச் சொல். அதனால், அனைத்து மொழிகளுக்கும் இது பொதுவானது.வேதமாதாவான, காயத்ரீ தேவியே இதில் அடங்கி இருப்பதாக கூறுவர்.முக்காலமும் உணர்ந்தஞானியரின் காதில், ஓங்கார சப்தம் ஒலித்துக் கொண்டே இருக்கும். கீதையில் கிருஷ்ணர், அர்ஜூனனுக்கு இதன் மகிமையை எடுத்துக் கூறியுள்ளார். இதை ஜெபிப்பவர்கள் பிறவிச்சக்கரத்தில் இருந்துவிடுபடுவர்.விவேகானந்தர், ஆன்மநேய ஒருமைப்பாட்டுக் கோயில் என்னும் பெயரில், எல்லா ஊர்களிலும் ஓம் மந்திரக் கோயில் அமைக்கவிரும் பியதுகுறிப்பிடத்தக்கது.முதல் கடவுளானவிநாயகரின் திருவுருவம்ஓம் என்னும் மந்திரவடிவமாக இருப்பதால்,அவருக்கு பிரணவ மூர்த்தி என்ற பெயர் உண்டு.பிரணவம் என்றால் என்றும் புதியது.ஆம்...கடவுளைப் பற்றி எப்போது ஆய்வுசெய்தாலும், புதிதுபுதிதாகத் தான் கருத்துக்கள் தோன்றும். அதற்கு முடிவே இராது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !