உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புகழ் தரும் ஆயிரம்..!

புகழ் தரும் ஆயிரம்..!

பாண்டவர்களில் மூத்தவரான தர்மர், பீஷ்மரிடம் பிறவித்துன்பம் தீர வழிகாட்டும்படி வேண்டினார். தூய மனதுடன் விஷ்ணுவின் ஆயிரம் திருநாமங்களைச் சொல்லி வழிபட்டால் பிறவிப்பிணி தீரும் என பீஷ்மர் உபதேசித்தார். இதை விஷ்ணு சகஸ்ர நாமம் என்பர். விஷ்ணுவைச் சரண்அடைந்தவர்க்கு முன்வினை பாவம் நீங்கும். வாழ்வில் செல்வம், புகழ் நிலைக்கும். மகாபாரதத்தில் 13வது பகுதியான அனுசாசனிக பர்வம், பத்தாம் அத்யாயத்தில், 142 ஸ்லோகங்களில் விஷ்ணு சகஸ்ரநாமம் கூறப்பட்டுள்ளது. முதல் 13 ஸ்லோகம் முன்னுரையாகவும், அடுத்த 107 ஸ்லோகம் சகஸ்ர நாமங்களையும், இறுதி 22 ஸ்லோகம் ஜெபிப்பதால் வரும் நன்மையையும் எடுத்துச் சொல்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !