ஆணுக்குப் பாதம்.. பெண்ணுக்கு கேசம்!
ADDED :4619 days ago
இறைவனின் வடிவத்தை திருமேனி, சிலை, விக்ரகம் என்று சொல்வர். இதன் அழகினை அருளாளர்கள் பாடல்களாகப் பாடியுள்ளனர். ஆண் தெய்வங்களை பாதம் முதல் கேசம்(முடி) வரை வர்ணிக்கவேண்டும். இதற்கு பாதாதி கேசம் என பெயர். பெண்தெய்வங்களை கேசம் முதல் அடிவரை வர்ணிப்பது மரபு. இதைகேசாதி பாதம் என்பர். சிவன் மீது பாடிய சிவானந்த லஹரியும், அம்பிகை மீதுள்ள சவுந்தர்ய லஹரியும் புகழ் பெற்றவை. ஆதிசங்கரரால் பாடப்பட்ட இவை, நூறு ஸ்லோகங்களில் சிவ, அம்பாள் சிலைகளின் அழகினை விவரிக்கின்றன.