வழிபாட்டில் அஞ்சுமுறை குட்டுங்க!
ADDED :4619 days ago
வழிபாட்டில் முதற்கடவுளான விநாயகரை வணங்கியே தொடங்குவர். அப்போது
சுக்லாம் பரதரம் விஷ்ணும்
சசிவர்ணம் சதுர்புஜம்
ப்ரஸந்த வதநம் த்யாயேத்
ஸர்வ விக்னோப சாந்தயே
என்ற மந்திரம் சொல்லி தோப்புக்கரணமிட்டு நெற்றியில் குட்டிக்கொள்வர். வெண்ணிற ஆடை அணிந்தவரே! எங்கும் நிறைந்திருப்பவரே! நிலாவைப் போல வெண்ணிறம் கொண்டவரே! நான்கு கைகளுடையவரே! மலர்ந்த முகம் கொண்டவரே! உம்மை தியானிக்கிறேன், என்பது இந்த ஸ்லோகத்தின் பொருள். இந்த ஐந்து நாமத்திற்கும் ஒவ்வொன்றாக ஐந்து முறை குட்டிக் கொள்ள வேண்டும். வலக்கையை மேலேயும், இடக்கையை கீழேயும் வைத்து நெற்றிப் பொட்டில் குட்ட வேண்டும். இதன் மூலம் உயிர், உள்ளம், உடல் ஆகிய மூன்றும் விழிப்படைந்து தெய்வீகசக்தியைப் பெறுகின்றன.