உபன்யாசம் பொழுதுபோக்கல்ல!
ADDED :4619 days ago
ஆன்மிகச் சொற்பொழிவுகளை உபந்யாசம் என்று குறிப்பிடுவர். ந்யாசம் என்ற சொல்லுக்குப் பல பொருள்கள் உண்டு. அதில் ஒன்று பதிய வைப்பது. ஒரு விஷயத்தை, கேட்போரின் மனதில் பதிய வைப்பதை உபந்யாசம் என்பர். ஆன்மிக விஷயங்களை பலபேருக்கு எடுத்துச் சொல்வதை உபந்யாசம் என்று தமிழகத்தில் சொல்கிறார்கள். ஆனால், வடமாநிலங்களில் பலரை சென்றடையும் நோக்கத்தில் கட்டுரையாக எழுதுவதற்கே உபந்யாசம் என்று தான் பெயர். பொழுதுபோக்காக இல்லாமல், மனதில் பதிய வைக்கும் விதத்தில் தெய்வீக விஷயங்களைப் பேசுவதும், எழுதுவதும் உபந்யாசம் ஆகும்.