எதிர்மறை எண்ணங்கள் ஏற்படாமல் இருக்க பரிகாரம்!
ADDED :4618 days ago
மனோபலம் இல்லாததே இதற்கு காரணம். திங்கள்கிழமை சிவனை நினைத்து சோமவார விரதம் அல்லது பவுர்ணமி விரதம் மேற்கொள்ளலாம். அன்று மாலை முருகன் கோயிலில் தீபமேற்றிவழிபடுங்கள். கந்தசஷ்டி கவசம், சண்முக கவசம் போன்ற துதிப்பாடல்களை அன்றாடம் படியுங்கள். சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகரை வணங்குங்கள். மனக்குழப்பம் நீங்கி விடும்.