மயிலாப்பூர் கபாலீசுவரர் விடையாற்றி உற்சவத்தில் பிரியா சகோதரிகள் கச்சேரி!
ADDED :4244 days ago
மயிலாப்பூர் : மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில், விடையாற்றி உற்சவத்தை ஒட்டி, நேற்று, சண்முகப் பிரியா மற்றும் ஹரிப்பிரியா சகோதரிகளின் கச்சேரி நடந்தது. மயிலாப்பூர் காபலீசுவரர் கோவில் விடையாற்றி உற்சவத்தின், ஆறாம் நாளான நேற்று, சண்முகப் பிரியா மற்றும் ஹரிப்பிரியா சகோதரிகளின் இசை கச்சேரி நடந்தது. அதில், கிருஷ்ணசுவாமி, வயலினும், பத்ரி சதீஷ்குமார், மிருதங்கமும், புருஷோத்தமன், கஞ்சிராவும் இசைத்தனர்.