உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அதிகார நந்தி வாகனத்தில் திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் திருவீதி உலா!

அதிகார நந்தி வாகனத்தில் திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் திருவீதி உலா!

திருவள்ளூர்: தீர்த்தீஸ்வரர் கோவிலில் நடைபெறும் பங்குனி பிரம்மோற்சவ விழாவில், அதிகார நந்தி வாகனத்தில், உற்சவர் திரு வீதி உலா வந்தார். திருவள்ளூர், திரிபுர சுந்தரி அம்பாள் சமேத தீர்த்தீஸ்வரர் கோவிலில், கடந்த, 24ம் தேதி கொடியேற்றத்துடன் பங்குனி பிரம்மோற்சவ விழா துவங்கியது.  தினமும் காலை, மாலை இரு வேளையிலும், பல்வேறு வாகனங்களில் உற்சவர் வீதிகளில் வலம் வந்தார். நேற்று முன்தினம் இரவு, அதிகார நந்தி வாகனத்தில் தீர்த்தீஸ்வரர் அலங்கரிக்கப்பட்டு, திரிபுர சுந்தரி அம்பாளுடன் திருவீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வரும் ஏப்., 4ம் தேதி வரை, நடைபெறும் பிரம்மோற்சவ விழாவில், ஏப்., 1ம் தேதி இரவு, 7:00 மணி அளவில் தீர்த்தீஸ்வரருக்கும், திரிபுரசுந்தரிக்கும் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. ஏப்., 4ம் தேதி, காலை மகா அபிஷேகமும், இரவு பந்தம்பரி தொட்டி உற்சவத்துடன் விழா நிறைவடைகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !