உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் 10 நாட்கள் குங்கும லட்சார்ச்சனை!

சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் 10 நாட்கள் குங்கும லட்சார்ச்சனை!

சேலம்: வசந்த நவராத்திரியை முன்னிட்டு, சுகவனேஸ்வரர் கோவிலில் வரும், 31ம் தேதி முதல், 10 நாட்களுக்கு குங்கும லட்சார்ச்சனை நடக்கிறது. வசந்த நவராத்திரியை முன்னிட்டு, சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் மார்ச், 31ம் தேதி முதல் ஏப்ரல், 9ம் தேதி வரை தினமும் மாலை, 6.30 மணிக்கு, சொர்ணாம்பிகை அம்மனுக்கு குங்கும லட்சார்ச்சனை நடக்கிறது. லட்சார்ச்சனையின் போது, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் செய்யப்பட்டு, பதினாறு வகையான உபசாரங்களுடன் வேத மந்திரங்கள் முழங்க பூஜை செய்யப்படவுள்ளது. லட்சார்ச்சனைக்கு பயன்படுத்தும் குங்குமம், பூஜை முடிவில் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. ஏப்ரல், 8ம் தேதி ராமநவமி அன்று காலை, 8 மணிக்கு, 108 மூலிகைகளால் லலிதா சகஸ்ரநாம ஹோமம் நடக்கிறது.

மார்ச், 31ம் தேதி டாக்டர் விஜயலட்சுமி குழுவினரின் பக்தி இன்னிசையுடன் விழா துவங்குகிறது. ஏப்ரல், 1ம் தேதி லட்சுமி ஹயக்ரீவர் பஜனா மண்டலி குழுவினரின் இசை நிகழ்ச்சி, 2ம் தேதி ஜீவரேகா குழுவினரின் கர்நாடக இசை கச்சேரி, 3ம் தேதி சிவகாமி கருணாகரன் குழுவினரின் வீணை நிகழ்ச்சி, 4ம் தேதி உமா மகேஸ்வரி வீணை இசை நிகழ்ச்சி, 5ம் தேதி வாசவி சுபிக்ஷõ பஜனை மண்டலி குழுவின் நிகழ்ச்சி, 6ம் தேதி சேலம் வீணை சங்கமம் குழுவினர் வீணை இசை, 7ம் தேதி சேலம் ஜெயரத்னா ஸ்கூல் ஆஃப் மியூசிக் குழுவினர் இன்னிசை, 8ம் தேதி அபர்ணா ரமேஷ் குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சி, 9ம் தேதி கற்பகம் நாட்டிய கலாலய குழுவினரின் கோலாட்ட நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் கட்டளைதாரர் ராதாகிருஷ்ணன் தலைமையில், உதவி ஆணையர் மங்கையர்கரசி, அலுவலக பணியாளர்கள், அர்ச்சகர்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !