உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பரமத்தி வேலூர் மகா மாரியம்மன் கோயில் தேரோட்டம்

பரமத்தி வேலூர் மகா மாரியம்மன் கோயில் தேரோட்டம்

பரமத்தி வேலூர்: பரமத்தி வேலூர் வட்டம், வேலூர் மகா மாரியம்மன் கோயில் தேரோட்டம்  நடைபெற்றது.இக் கோயிலில் மார்ச் 16-ஆம் தேதி காப்பு கட்டி கம்பம் நடும் விழாவுடன் தேர் திருவிழா தொடங்கியது. கடந்த 23-- ம்- தேதி இரவு மறுகாப்பு கட்டுதலும், கிராம சாந்தியும் நடைபெற்றன.24-ஆம் தேதி முதல் 30--ம் தேதி வரை கட்டளைதாரர்கள் சார்பில், அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது. இதையடுத்து, சிறப்பு தீபாராதனைகள்  நடைபெற்றன. தொடர்ந்து, பரமத்தி வேலூர்  மற்றும் சுற்று வட்டார பொதுமக்கள், பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !