மயிலம் முருகன் கோவிலில் 12ம் தேதி தேர் திருவிழா!
மயிலம்: மயிலம் முருகன் கோவிலில் வரும் ஏப்ரல் 12ம் தேதி தேர் திருவிழா நடக்கிறது. மயிலம் வள்ளி, தெய்வானை, சுப்ரமணியர் சுவாமி திருக் கோவிலில் வரும் ஏப்ரல் 4ம் தேதி பங்குனி உத்திரப் பெருவிழா துவங்குகிறது. 4ம் தேதி காலை 6 மணிக்கு கொடியேற்றம், காலை 11 மணிக்கு வெள்ளி விமான உற்சவம், இரவு விநாயகர் உற்சவம் நடக்கிறது. பின்பு சுவாமி சூரிய விமானத்தில் கிரிவலம் நடக்கிறது. வரும் 5ம் தேதி ஆட்டு கிடா வாகன உற்சவம், 6ம் தேதி இரவு வெள்ளி பூத வாகனம், 7ம் தேதி இரவு வெள்ளி நாக வாகன உற்சவம், 8ம் தேதி தங்க மயில் வாகன உற்சவம், 9ம் தேதி இரவு வெள்ளி யானை வாகன உற்சவம், 10ம் தேதி இரவு வெள்ளி மயில் வாகன உற்சவம், 1 1ம் தேதி திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. பின்பு வெள்ளி குதிரை வாகனத்தில் சுவாமி மலைவல காட்சி நடக்கிறது. வரும் 12ம் தேதி காலை 5.45 மணிக்கு மயிலம் ஆதீனம் 20ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் திருத்தேரை வடம் பிடித்து துவக்கி வைக்கிறார். 13ம் தேதி தெப்ப உற்சவம், 14ம்தேதி இரவு முத்துப்பல்லக்கு விழா, 15ம் தேதி சண்டிகேஸ்வரர் உற்சவம் நடக்கிறது.