உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவசுப்பிரமணிய ஸ்வாமி கோவில் தேர்த்திருவிழா!

சிவசுப்பிரமணிய ஸ்வாமி கோவில் தேர்த்திருவிழா!

தர்மபுரி: தர்மபுரி அன்னசாகரத்தில் உள்ள சிவசுப்பிரமணிய ஸ்வாமி கோவில் பங்குனி தேர்த்திருவிழா, 13ம் தேதி நடக்கிறது. தர்மபுரி அன்னசாகரத்தில் உள்ள விநாயகர், சிவசுப்பிரமணிய ஸ்வாமி பங்குனி உத்திர தேர்த்திருவிழா வரும், 6ம் தேதி, புற்று மண் எடுத்தல் மற்றும் வாஸ்து சாந்தி பூஜையுடன் துவங்குகிறது. மறுநாள், 7ம் தேதி விழாக்கொடியேற்றம், ஆட்டிக்கிடா வாகன உற்சவமும், 8ம் தேதி நரி வாகன உற்சவமும் நடக்கிறது. மறுநாள், 9ம் தேதி பூத வாகன உற்சவமும், 10ம் தேதி நாக வாகன உற்சவமும், 11ம் தேதி ஏராளமான பெண்கள் பங்கேற்கும் பால்குட ஊர்வலமும், தொடர்ந்து, ஸ்வாமிக்கு சிறப்பு பால் அபிஷேகம் நடக்கிறது. இரவு, வள்ளி, தெய்வானை சமேத சிவசுப்பிரமணி ஸ்வாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. தொடர்ந்து, தோரண வாயிலில் ஊஞ்சல் சேவையும், மயில் வாகனத்தில் ஸ்வாமி திருவீதி உலாவும் நடக்கிறது. 12ம் தேதி விநாயகர் தேரோட்டமும், யானை வாகன உற்சவமும் நடக்கிறது. விழாவின் முக்கிய நாளான, 13ம் தேதி மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை, 9.30 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் சிவசுப்பிரமணிய ஸ்வாமி மகா ரதத்தில் அருள் பாலிக்க, பெண்கள் மட்டும் வடம் பிடிக்கும் தேரோட்டம் நடக்கிறது. மாலை, 4 மணிக்கு, மகா ரதத்தை பக்தர்கள் இழுத்து நிலை பெயர்க்கும் விழா நடக்கிறது. அன்று காலை, 11 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. வரும், 14ம் தேதி வேடர் பறி உற்வசம் நடக்கிறது. 15ம் தேதி, மஞ்சள் நீராட்டு விழாவும், கொடி இறக்கமும், 16ம் தேதி சயன உற்சவமும், 17ம் தேதி விடையாற்றி உற்சவமும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை, செங்குந்த சமூகத்தினர் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !