பூரியில் மெத்தைக்கு பூஜை!
ADDED :4605 days ago
பூரியில் ஆதி சங்கரர் நிறுவியது, கோவர்த்தன பீடம். சொர்க்கத்தின் நுழைவாயில் என்று பொருள்படும் ஸ்வர்க்கதுவார் என்ற கடற்கரைப்பகுதியில் இப்பீடம் உள்ளது. இங்குள்ள உமாதேவி கோயிலிற்கு எதிரில் உள்ள கோயிலில் மிகவும் நைந்துபோன ஒரு பழைய மெத்தையை பட்டாடை போர்த்தி மலர்களைத் தூவி வைத்திருக்கின்றனர். இந்த மெத்தை மிகவும் புனிதம் வாய்ந்தது. காரணம், ஆதிசங்கரர் கோவர்த்தன பீடத்தை நிறுவியபோது இதில் அமர்ந்துதான் பக்தர்களுக்கு ஆசி வழங்கி, உபதேசமும் செய்தாராம். எனவே இப்படுக்கைக்கு இப்போதும் தினசரி பூஜையும் தீபாராதனையும் நடைபெற்று வருகிறது.