உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கோவிலூர் தபோவனத்தில் 15ம் தேதி சித்ரா பவுர்ணமி விழா

திருக்கோவிலூர் தபோவனத்தில் 15ம் தேதி சித்ரா பவுர்ணமி விழா

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் ஞானா னந்தா தபோவனத்தில் வரும் 15ம் தேதி சித்ராபவுர்ணமி விழா நடக்கிறது. திருக்கோவிலூர் ஞானானந்தா தபோவனத்தில் சித்ராபவுர்ணமி தினமான வரும் 15ம் தேதி சிறப்பு வழி பாடுகள் நடக்கிறது. அதிகாலை 5 மணிக்கு அதிஷ்டானத்தில் மகன்யாச ஏகாதச ருத்ரஜபம், மூர்த்திகள் அபிஷேகம் நடக்கிறது. காலை 6 மணிக்கு கணபதி ஹோமம், 7 மணிக்கு பாதபூஜை, 8 மணிக்கு அதிஷ்டானத்தில் விசேஷ அபிஷேகம், பஜனை, மாலை 4.30 மணிக்கு மணிமண்டபத்தில் அபிஷேகம், பூஜைகள் நடக்கிறது. இரவு 7 மணிக்கு அதிஷ்டானத்தில் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, சுப்புராமன் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !