உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருநாவலூர் சிவன் கோவிலில் 6ம் தேதி சூரிய தரிசனம் துவக்கம்!

திருநாவலூர் சிவன் கோவிலில் 6ம் தேதி சூரிய தரிசனம் துவக்கம்!

திருவெண்ணெய்நல்லூர்: திருநாவலூர் சிவன் கோவிலில் வரும் 6ம் தேதி சூரிய தரிசனம் துவங்கி 10ம் தேதி வரை நடக்கிறது. திருநாவலூரில் பிரசித்தி பெற்ற மனோன்மணி சமேத பக்தஜனேஸ்வரர் கோவிலில் வரும் 6ம் தேதி சூரிய தரிசனம் துவங்கி 10ம் தேதி வரை நடக்கிறது. தினமும் காலை 6:00 மணிக்கு சூரியன் தனது ஒளிக்கற்றையால் இறைவனை வழிபடும் அபூர்வ நிகழ்ச்சி நடக்கிறது. முன் னதாக தினமும் காலை 4:30 மணி முதல் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்படுகிறது. சூரிய தரிசனம் காணவரும் பக்தர்கள் காலை 5:30 மணிக்குள் கோவிலுக்குள் இருக்க வேண்டும். ஏற்பாடுகளை கோவில் செயல்அலுவலர் முத்துலட்சுமி மற்றும் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !