உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சாயிபாபா பிறந்த நாள் விழா

சாயிபாபா பிறந்த நாள் விழா

திண்டிவனம்: திண்டிவனம் மகளிர் காவல் நிலையம் அருகில் உள்ள ஷீரடி சாயிபாபா கோவிலில் சாயிபாபாவின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. காலை 8.00 மணிக்கு சாயிபாபா திரு உருவ சிலைக்கு பால் அபிஷேகம் ஆராதனையும், 9.00 மணிக்கு சாயிபஜன் நிகழ்ச்சியும், 10.00 மணிக்கு யாகசாலை பூஜைகள் நடந்தன. 12.30 மணிக்கு மங்கள ஆரத்தி, 1.00 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !