குரு பார்க்க கோடி நன்மை என்பதற்கு என்ன அர்த்தம்?
ADDED :4548 days ago
நவக்கிரகங்களில் முழுமையான சுபகிரகம் குரு. இவர் தேவர்களுக்கு பாடம் போதிக்கும் குருவுமாவார். எனவே, இவரது பார்வை எந்த ராசியின் மீது பட்டாலும் எல்லாத் தோஷங்களும் நீங்கிவிடும். ஒருவருடைய ராசிப்படி ஏழரைச்சனி நடக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அந்த ராசிக்கு குரு பார்வை இருந்தால் கெடுதல் விளையாது என்பதையே குரு பார்க்க கோடி நன்மை என்கிறார்கள். கோடி என்றால் அளவு கடந்த என்றும் பொருள் உண்டு. ஒரு மனிதனின் வாழ்வில் தொழில் துவங்குதல், வேலை கிடைத்தல், திருமணம், புத்திரப்பேறு ஆகியவை முக்கியமானவை. இவற்றுக்கு குரு பார்வை தேவை. இவை சாத்தியமாகி விட்டால், நம் மனம் படுகிற சந்தோஷத்துக்கு அளவிருக்குமா! அளவில்லாத மகிழ்ச்சியையே கோடி நன்மை என்கிறார்கள்.