சிலுவை பாதை ஊர்வலத்துடன்புனித வெள்ளி
ADDED :4229 days ago
கோவை : புனிதவெள்ளியை முன்னிட்டு பெரிய கடைவீதி, புனித துாய மைக்கேல் சர்ச்சிலிருந்து நேற்று காலை சிலுவைபாதை ஊர்வலம் துவங்கியது. ஏராளமான கிறிஸ்தவர்கள் சிலுவைகளை ஏந்தி பங்கேற்றனர். இயேசுநாதர் சிலுவையில் அறையப்பட்ட போது நடந்த ௧௪ நிகழ்வுகளை, நினைவுபடுத்தும் வகையில், பைபிள் வாசகங்களை படித்தவாறு ஊர்வலமாக சென்றனர். துாயமைக்கேல் சர்ச்சிலிருந்து துவங்கிய ஊர்வலம், பெரியகடைவீதி, மணிக்கூண்டு, என்.எச்.,ரோடு வழியாக, உக்கடத்தை அடைந்தது. அங்கிருந்து பைபாஸ் ரோடு வழியாக செயின்ட் செபஸ்டின் சர்ச்சை அடைந்தது.