தூய செங்கோல் மாதா ஆலய பாஸ்கு திருவிழா!
ADDED :4225 days ago
தொண்டி : தொண்டி அருகே காரங்காடு கிராமத்தில் தூய செங்கோல் மாதா ஆலய 120வது ஆண்டு, பாஸ்கு பெருவிழா நடந்தது. முக்கிய நிகழ்ச்சியாக, "பாடுகளின் பாஸ்கும், உயிர்ப்பின் பாஸ்கும், மாதாவின் வாழ்க்கை வரலாறு நாடகம், இரு நாட்கள் நடந்தது. காரங்காடு மற்றும் சுற்றுவட்டாரத்தில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பாதிரியார் செல்வகுமார் மற்றும் கிராம நிர்வாகிகள் செய்திருந்தனர்.