தேய்பிறை அஷ்டமி: வெள்ளிகவச அலங்காரத்தில் காலபைரவர்!
ADDED :4545 days ago
தர்மபுரி: தர்மபுரி, அதியமான்கோட்டையில் பிரசித்தி பெற்ற காலபைரவர் கோவிலில் மாதம்தோறும் தேய்பிறை, அஷ்டமி உள்ளிட்ட நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகிறது. நேற்று அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு அஷ்டபைரவர் யாகம், அஷ்டலட்சுமி யாகம், தனகார்சன குபேரயாகம், அதிருத்ர யாகம் என பல்வேறு யாக பூஜைகள் நடைபெற்றது. தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு கால பைரவர் வெள்ளிகவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்திருந்து தரிசனம் செய்தனர்.