உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உக்ரநரசிம்மர் கோயிலில் ஜெயலலிதா பெயரில் சிறப்பு ஹோமம்!

உக்ரநரசிம்மர் கோயிலில் ஜெயலலிதா பெயரில் சிறப்பு ஹோமம்!

மயிலாடுதுறை: நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள திருக்குறையலூரில் பஞ்ச நரசிம்ம ஷேத்திரங்களில் முதன்மையான உக்ர நரசிம்மர் கோயில் உள்ளது. இங்கு ஹிரண்ய சம்ஹாரத்திற்காக உக்ர நரசிம்மர் அவதரித்துள்ளார். மேலும் திருமங்கை ஆழ்வார் அவதரித்த இத்தலத்தில் உக்ர நரசிம்மரை அ ம்மாவாசை மற்றும் பிரதோஷ நாட்களில் வழிபட்டால் பித்ருதோஷம்,சத்ரு தோஷம் நீங்கும் என்பது ஐதீகம். இத்தகைய சிறப்பு வாய்ந்த உக்ர நரசிம்மர் கோயிலில் தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆரோக்கியமாக வாழ வேண்டியும்,லோக்சபா தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறவேண்டியும் மகாசுதர்சண ஹோமம், மகா சுதர்சண காயத்ரி ஹோமம், நரசிம்ம காயத்ரி ஹோமம், ஏகதின லட்சார் ச்சனை ஆகியவை நடத்தப்பட்டன. ஹோமத்தினை தேரிழந்தூர் வாசன், பார்த்தன்பள்ளி பார்த்தசாரதி, அண்ண ன் கோயில் மாதவன் ஆகியோர் தலைமையில் 16 பட்டாச்சாரியார்கள் நடத்தி னர். பெரும் பொருள் செலவில் நடத்தப்பட்ட இந்த ஹோமத்திற்கான ஏற்பாடுகளை வைத்தீஸ்வரன்கோயில் நாடி ஜோதிடர் ராஜு செய்திருந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு உக்ர நரசிம்மரை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !