உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமநாதபுரம் சொக்கநாதர் கோயிலில் மே 1ல் சித்திரை திருவிழா துவக்கம்!

ராமநாதபுரம் சொக்கநாதர் கோயிலில் மே 1ல் சித்திரை திருவிழா துவக்கம்!

ராமநாதபுரம் : ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்குட்பட்ட மீனாட்சி சொக்கநாதர் கோயில் சித்திரை திருவிழா மே 1ல், கொடியேற்றத்துடன் துவங்குகிறது. நாளை(ஏப்.30) இரவு 7 மணிக்கு வாசல் விநாயகர் வழிபாடு, மே 1 காலை 10.30 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. நாளை மீனாட்சி, மே 2ல், காமாட்சி, 3ல், சிவபூஜை, 4ல், முருகனுக்கு வேல் வழங்கும் காட்சி, 5ல், திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டல் அலங்காரம், 6ல், பிட்டுக்கு மண் சுமந்த காட்சி, 7ல், அம்மன் தபசு கோலம், 8ல், மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம், 9ல், திக் விஜயம், 10ல், காலை 10.30 மணிக்கு மேல் 10.55 மணிக்குள் மீனாட்சி சொக்கநாதர் சுவாமிக்கு திருக்கல்யாணம், 11ல், ஊஞ்சல் உற்சவம், மே 12ல், இரவு சுவாமி திருவீதியுலா நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !