உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீரட்டானேஸ்வரர் கோவிலில் மழை வேண்டி வருணஜப யாகம்

வீரட்டானேஸ்வரர் கோவிலில் மழை வேண்டி வருணஜப யாகம்

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர், கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் நேற்று அதிகாலை மழை வேண்டி வருணஜப யாகம் நடந்தது. தமிழகத்தில் பருவமழை பொய்த்து போனதால் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சுட்டெரிக்கும் வெயிலில் கோடை வெப்பமும், மக்களை வாட்டி வதைக்கிறது. நிலைமையை சமாளிக்க மழை வேண்டி அரசின் சார்பில் அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் உள்ள கோவில்களில் வருண யாகம் நடத்துமாறு, நேற்று முன்தினம் ரகசிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து திருக்கோவிலூர், கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் யாகத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. நேற்று அதிகாலை 5:55 மணிக்கு யாகசாலையில் விக்னேஷ்வரபூஜை, கடஸ்தாபனம், வருணபூஜை வருண யாகம், ருத்ரஹோமம், 9 :00 மணிக்கு பூர்ணாகுதி நடந்தது. மூலவர் வீரட்டானேஸ்வரருக்கு கடஅபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. மூலவர் தாராபாத்திர அபிஷேகத்தால், 24 மணி நேரமும் குளிர்விக்கும் சடங்கும் துவக்கி வைக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறை செய்திருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !