புதுப்பாளையம் மாரியம்மன் கோவிலில் மண்டல பூஜை நிறைவு!
ADDED :4182 days ago
ப.வேலூர்: ப.வேலூர் அடுத்த, பொத்தனூர் புதுப்பாளையம் மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேக மண்டல பூஜை நிறைவு விழா, நேற்று நடந்தது. விழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம் விக்னேஷ்வர பூஜை, புண்யாக வாசனம், பூர்வாங்க பூஜை, யோகினி பைரவர் பலி, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. நேற்று காலை, 7 மணிக்கு சண்டி ஹோமம், கன்யா பூஜை, மதியம், 2 மணிக்கு, மகாபூர்காகுதி, கடம் புறப்பாடு, சங்காபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது. விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை திருப்பணி குழுவினர் செய்திருந்தனர்.