லட்சுமிநரசிம்ம சுவாமி பெருமாள் கோவிலில்11ம் தேதி பிரம்மோற்சவம்
திண்டிவனம்: திண்டிவனம் கனகவல்லி நாயிக சமேத லட்சுமிநரசிம்ம சுவாமி கோவிலில் வரும் 11ம் தேதி பிரம்மோற்சவ விழா துவங்குகிறது.
இதையொட்டி அன்று மாலை செல்வர் புறப்பாடு, மிருத்சங்கிரகனம், 12ம் தேதி காலை துவஜாரோகணம் சூரிய பிரபை, மாலை அம்ச வாகனம், 13ம் தேதி காலை பல்லக்கு, மாலை சிம்ஹ வாகனம் 14ம் தேதி காலை கருட சேவை, மாலை அனுமந்த வாகனம் நிகழ்ச்சி நடக்கிறது. 15 ம் தேதி காலை பல்லக்கு, மாலை நாக வாகனம், 16ம் தேதி காலை பல்லக்கு, மாலை கருட சேவை, 17ம் தேதி காலை சூர்ணாபிஷேகம், மாலை யானை வாகனம், 18ம் தேதி காலை பல்லக்கு, மாலை சூர்ய பிரபை, சந்திர பிரபை, 19ம் தேதி காலை பல்லக்கு, மாலை குதிரை வாகனம், திருக்கல்யாணம் நடக்கிறது. 20ம் தேதி காலை ரதாரோகணம், மதியம் தீர்த்தவாரி, மாலை அவரோகணம், 21ம் தேதி காலை பல்லக்கு நாச்சியார் சம்பவரதம், மாலை சந்திர பிரபை, 22ம் தேதி மாலை விடையாற்றி நிகழ்ச்சி நடக்கிறது.