மதுரை மீனாட்சி திருக்கல்யாணம்: மே 9ல் முருகன் புறப்பாடு!
ADDED :4231 days ago
திருப்பரங்குன்றம் : மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தில் பங்கேற்க சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை, பவளக்கனிவாய் பெருமாள் மே 9ல் திருப்பரங்குன்றத்திலிருந்து புறப்படுகின்றனர்.பெற்றோர் திருமணத்தில் பாண்டியராஜாவாக சுப்பிரமணிய சுவாமி, தெய்வானையுடன் பங்கேற்பார். பவளக்கனிவாய் பெருமாள் தாரைவார்த்துக் கொடுக்கிறார். திருக்கல்யாணம், தேரோட்டம் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று மே 13ல் பூப்பல்லக்கில் திருப்பரங்குன்றம் கோயிலுக்கு திரும்புகின்றனர்.