சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா
ADDED :4285 days ago
அரூர்: தர்மபுரி மாவட்டம் அரூர் மேல் பாட்சாப்பேட்டை சக்தி விநாயகர் கோவில் புனரமைக்கப்பட்டு கும்பாபி ஷேக விழா நடைபெற் றது. காலை மங்கள இசை மற்றும் திரு விளக்குஏற்றுதல் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மாலை அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை, வாஸ்து சாந்தி, பிரவேச பலி, மிருத்சங்கிரஹணம், அங்குரார்பணம், ரக்ஷாபந் தனம் நடை பெற்றது.பின்னர் கும்ப அலங்காரம், கலாகர்ஷனம், யாக சாலை பிரவேஷம், திரவியஹூதி, பூர்ணாஹூதி, தீபாராதனை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண் டனர்.