உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வேலூர் நாராயணி பீடத்தில் 10,008 பன்னீர் கலச ஊர்வலம்!

வேலூர் நாராயணி பீடத்தில் 10,008 பன்னீர் கலச ஊர்வலம்!

வேலூர்: வேலூர் மாவட்டம், நாராயணி பீடத்தில், 22வது ஆண்டு விழாவை முன்னிட்டு, 10,008 பன்னீர் கலச அபிஷேக ஊர்வலம் நடந்தது. வேலூர் அடுத்த திருமலைக்கோடி ஓம் சக்தி நாராயணி பீடத்தில், 22வது ஆண்டு, விழாவை முன்னிட்டு, உலக மக்கள் நன்மைக்காகவும், இயற்கை வளத்துக்காகவும், 10,008 பன்னீர் கலச அபிஷேகத்தை பக்தர்கள், தங்கள் கைகளால் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இதற்காக, திருமலைக்கோடி நாராயணி வித்யாலயா பள்ளியில் இருந்து, நேற்று காலை, 8 மணிக்கு பக்தர்கள் ஊர்வலம் நடந்தது. சக்தி அம்மா துவக்கி வைத்தார். ஊர்வலத்தில், சிறப்பு விருந்தினராக சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி ராஜா, தமிழ் வளர்ச்சித் துறை தலைமை செயலாளர் ராஜாராம் மற்றும் ஏராளமான வெளிநாட்டு பக்தர்கள் பங்கேற்றனர். ஊர்வலம் நாராயணி பீடத்துக்கு வந்ததும், சக்தி அம்மா தலைமையில் பக்தர்கள், நாராயணி அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். பின், சக்தி அம்மாவின் வாழ்க்கை வரலாறு அடங்கிய, "சிடியை சக்தி அம்மா வெளியிட, நீதிபதி ராஜா பெற்றுக் கொண்டார். விழாவில், நாராயணி மருத்துவனை இயக்குனர் பாலாஜி, டிரஸ்டி சவுந்தரராஜன், மேலாளர் சம்பத், தங்கக்கோவில் இயக்குனர் சுரேஷ்பாபு, முன்னாள் மேயர் கார்த்திகேயன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !