மேல்நகர் திரவுபதியம்மன் கோவிலில் அர்ச்சுனன் தபசுவிழா
ADDED :4203 days ago
கண்ணமங்கலம்: கண்ணமங்கலத்தை அடுத்த மேல் நகரில் உள்ள திரவுபதியம்மன் கோவிலில் கடந்த மாதம் 24–ந் தேதி அக்கினி வசந்தவிழா துவங்கியது. விழா முக்கிய நிகழ்ச்சியான அர்ச்சுனன் தபசு விழா நடைபெற்றது. அர்ச்சுனன் வேடம ணிந்த நாடக கலைஞர்கள் சுமார் 50 அடி உயர தபசு மரத் தின் உச்சிக்கு சென்று தவம் செய்தனர். திருமண மான பெண்கள் குழந்தை வரம் வேண்டியும், திருமண மாகாத பெண்கள் திருமணம் நடைபெற வேண்டியும் தபசு மரத்தை சுற்றிவந்து வணங்கினர்.